நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'கொலையுதிர்காலம்' படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதா ரவி, இந்த படத்தின் நாயகி, நயன்தாரா பற்றியே மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதற்க்கு நயன்தாரா ரசிகர்கள் மட்டும் இன்றி, பிரபலங்கள் மத்தியிலும் கண்டனங்கள் எழுத்து வருகிறது. 

ராதாரவியின் பேச்சு குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் விக்னேஷ்சிவனுக்கு ராதாரவியின் சகோதரியும் நடிகையுமான ராதிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிலளித்துள்ளார். 

இதில் அவர் கூறியுள்ளது தற்போதைய காலத்தில் நயன்தாரா போல் ஒரு அர்ப்பணிப்பு தன்மையுள்ள வெகு சிலரில் அவரும் ஒருவர். அவருடன் பணிபுரிந்த காலங்களில் அவரை பற்றி பலவிஷயங்களை தெரிந்து வைத்தவர் என்ற முறையில் இதை நான் கூறுகிறேன். ராதாரவி பேசிய வீடியோ முழுவதையும் நான் பார்க்கவில்லை இருப்பினும் ராதாரவியை இன்று சந்தித்து அவரது கருத்து தவறானது என்று எடுத்து கூறினேன்' என்று கூறியுள்ளார்.

Scroll to load tweet…

விக்னேஷ் இயக்கிய 'நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாராவுடன் ராதிகா நடித்துள்ளார் என்பதும், வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள 'மிஸ்டர் லோக்கல்' படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.