பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம் என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக 50க்கும் மேற்பட்டோர் ஜோர்டான் சென்றனர். அப்போது உலகம் முழுவதும் கொரோனா பிரச்சனை தீவிரமடைய ஆரம்பித்தது. இதனால் விமான போக்குவரத்து அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் படக்குழுவினர் பாலைவனத்தில் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாக மத்திய, மாநில அரசுகளும் படக்குழுவினரை மீட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். 

இதையும் படிங்க: “பலாத்காரம் செய்வோம் என மிரட்டுகிறார்கள்”... பிரபல நடிகரின் ரசிகர்கள் மீது நடிகை பரபரப்பு புகார்...!

கொரோனா பிரச்சனையால் 4ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. அதன்படி ஜோர்டான் பாலைவனத்தில் 3 மாதங்களாக சிக்கித் தவித்த பிருத்விராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கடந்த 22ம் தேதி தனி விமானம் மூலம் கொச்சி வந்தடைந்தனர். அங்கு படக்குழுவினருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டனர். 

இதையும் படிங்க: மகளுடன் தனிமையில் உல்லாசம்... ஆபாச படங்களை அம்மாவிற்கு அனுப்பி மிரட்டிய இளைஞரை அலேக்காக தூக்கிய போலீஸ்...!

இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் தனது வீட்டிற்கு செல்லாமல், கொச்சியில் உள்ள விடுதி ஒன்றில் 14 நாட்கள் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். தனிமைப்படுத்தலுக்குப் பிறகு நடிகர் பிருத்விராஜூக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சோதனையின் முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளதை பிருத்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அத்துடன் கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இருப்பினும் மேலும் சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்ட பிறகே வீடு திரும்புவேன் என்று பதிவிட்டுள்ளார்.