Asianet News TamilAsianet News Tamil

நடிகை பூஜா 2 வது திருமணம் செய்து கொண்டது... பிரபல நடிகையின் 2 வது கணவரா? வெளிவந்த உண்மை!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் கணவரை விவாகரத்து செய்த நடிகை பூஜா ராமச்சந்திரன், கடந்த வாரம் இரண்டாவதாக நடிகர் ஜான் கொக்கனை, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
 

actress pooja married famouse actor meera vasudevan second husband
Author
Chennai, First Published Apr 21, 2019, 6:23 PM IST

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் கணவரை விவாகரத்து செய்த நடிகை பூஜா ராமச்சந்திரன், கடந்த வாரம் இரண்டாவதாக நடிகர் ஜான் கொக்கனை, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் ஜான் கொக்கனை, பிரபல நடிகையின் இரண்டாவது கணவர் என்பது தெரிய வந்துள்ளது.  தமிழில் 'உன்னை சரணடைந்தேன்', படத்தின் மூலம்  அறிமுகமானவர் நடிகை மீரா வாசுதேவன்.

actress pooja married famouse actor meera vasudevan second husband

இந்த படத்தை தொடர்ந்து, 'ஜெர்ரி' , 'ஆட்டநாயகன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் கூட ஜெயம் ரவி நடித்த 'அடங்கமறு',  படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் பிரபல ஒளிப்பதிவாளர், அசோக்குமாரின் மகன் விஷால் அகர்வால், என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

actress pooja married famouse actor meera vasudevan second husband

இரண்டாவதாக மலையாள நடிகர்,  ஜான் கொக்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 4 வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். 

actress pooja married famouse actor meera vasudevan second husband

இந்நிலையில் ஜான் கொக்கனை, தற்போது நடிகை பூஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மிகவும் எளிமையாக நடந்த இவர்களுடைய திருமணம் செய்தியை, பூஜா ராமச்சந்திரன் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios