நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டியில் கலந்துகொண்டு குடித்துவிட்டு கார் ஓட்டிய பிரபல நடிகையின் காரை பறிமுதல் செய்த போலீஸார், டிரைவரை கைது செய்து அவரது லைசன்ஸையும் ரத்து செய்தனர். சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து இத்தகவல் வெளியே கசிந்துள்ளது.

தமிழில் மிஷ்கினின் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கின் டாப் நடிகையாக உள்ளார். படத்துக்கு ரூ.2 கோடிக்கும் மேல் அவர் சம்பளம் வாங்குவதற்காகக் கூறப்படுகிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டார்களுல் ஒருவரான மகேஷ் பாபுவுடன் இவர் நடித்திருக்கும் ‘மக்ரிஷி’ படம் நாளை மறுநாள் ரிலீஸாகிறது.

இப்பட புரமோஷனுக்காக கடந்த 1ம் தேதி நட்சத்திர ஹோட்டலில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட பூஜா ஹெக்டேவும் நன்றாகக் குடித்துள்ளனர். பின்னர் டிரைவர் குடிபோதையில் வண்டி ஓட்ட பூஜா ஹெக்டே பின் சீட்டில் அமர தங்கள் இருப்பிடத்துக்குப் பயணித்துள்ளனர். அவர்களது காரை மடக்கி ஹைதராபாத் போலீஸார் சோதனை செய்தபோது இருவரும் மூக்குமுட்ட குடித்திருப்பது தெரிந்தது.

உடனே காரைப் பறிமுதல் செய்து டிரைவரின் லைசன்ஸையும் கைப்பற்றிய போலீஸார், அவர்கள் இருவர் மீதும் எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டு வேறொரு காரில் அனுப்பியதாகத் தெரிகிறது. ஒரு வாரமாக ரகசியமாக மிக ரகசியமாக இருந்த பூஜா ஹெக்டேவின் கார் பறிமுதல் செய்தி நாளை மறுநாள் அவரது படம் ரிலீஸாக உள்ள நிலையில் ஆந்திரா முழுக்க அனலடித்து வருகிறது.