பிரபலபாலிவுட் நடிகை பூஜா தத்வால் pooja dadwal சாப்பிட கூட  பணமில்லாமல் மருத்துவமனையில் அவதிப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது

இவர், நடிகர் சல்மான் கானுடன் veergati  என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடித்து உள்ள இவர்,கடந்த சில ஆண்டுகளாக  கோவாவில் வசித்து வருகிறார்

சில நாட்களுக்கு முன்,இவருக்கு நுரையீரல் தொடர்பான நோய் ஏற்பட்டு உள்ளது.பின்னர் சோதித்து பார்க்கும் போது காசநோய் என தெரிய வந்ததும்,மும்பையில் உள்ள மருத்துவ மனையில் அவர் சேர்க்கப்பட்டார்

பின்னர் அவரது உடல் நிலை மோசமானதை தொடர்ந்து,அவரது கணவர்  மற்றும் உறவினர்கள் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளனர்

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற கூட பணமில்லாமலும்  பசியும் பட்டினியுமாக இருக்கிறார் இந்த பிரபல நடிகை

தனது நிலையை புரிந்துக்கொண்ட பூஜா,தனக்கு உதவி செய்யுமாறு  நடிகர் சல்மான் கான் மற்றும் ஹிந்தி மீடியாக்களுக்கு இந்த வீடியோவை அனுப்பி வைத்துள்ளார்

அந்த வீடியோவில்,தன்னிடம் பணம் இல்லை என்றும், தான் சல்மான் கானை தொடர்பு கொண்டு உதவி பெற முயன்றேன்... ஆனால் முடியவில்லை..அவர் இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக எனக்கு உதவி செய்வார் என அதில் குறிப்பிட்டு உள்ளார்"

இந்த வீடியோ சல்மான் கண்ணில் படுமா..? அவர் உதவி செய்வாரா என்பது தெரியவில்லை...மற்றும் ஹிந்தி திரை உலகினர் யாராவது உதவ முன்வருவார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.