Asianet News TamilAsianet News Tamil

விவாகரத்தான அஜித் பட நடிகைக்கு ப்ரபோஸ் செய்த ரஜினி பட வில்லன்! ரொமான்டிக் புகைப்படத்தை பகிர்ந்த பிரபலம்!

கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், வில்லன் நடிகரை காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வரும் அஜித் பட நடிகை, முதல் முறையாக... தன்னுடைய இரண்டாவது கணவர் ப்ரபோஸ் செய்த புகைப்படத்தை வெளியிட்டு, இனிமையான நினைவுகளை பகிர்துகொண்டுள்ளார்.
 

actress pooja batra share the romantic memory with second husband
Author
Chennai, First Published May 28, 2020, 5:01 PM IST

கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், வில்லன் நடிகரை காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வரும் அஜித் பட நடிகை, முதல் முறையாக... தன்னுடைய இரண்டாவது கணவர் ப்ரபோஸ் செய்த புகைப்படத்தை வெளியிட்டு, இனிமையான நினைவுகளை பகிர்துகொண்டுள்ளார்.

1993 ஆம் ஆண்டு பெமினா மிஸ் இந்திய அழகியாக தேர்தெடுக்கப்பட்டவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பூஜா பத்ரா. இதை தொடர்ந்து இயக்குனர், வசந்த் எழுதி இயக்கி, மணிரத்னம் தயாரித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'ஆசை' படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார்.

actress pooja batra share the romantic memory with second husband

இதை தொடர்ந்து, நடிகர் சரத்குமார் நடித்த ஒருவன், அஜித் நடித்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். தமிழை தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் கவனம் செலுத்தினார்.

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனு எஸ். அலுவாலியாவை என்பவரை திருமணம் செய்து கலிபோர்னியாவில் குடியேறினார். 9 வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக 2011 இல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

actress pooja batra share the romantic memory with second husband

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு பாலிவுட் மற்றும் கோலிவுட்  வில்லன் நடிகர் நவாப் ஷாவை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் நடிகை பூஜா தனது கணவர் நவாப் ஷா முதல் முறையாக காதலை தெரிவித்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

actress pooja batra share the romantic memory with second husband

நடிகர் நவாப் ஷா, தமிழில் விஜயகாந்த் நடித்த 'கஜேந்திரா' சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'தர்பார் ' ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ...


 

Follow Us:
Download App:
  • android
  • ios