actress parvathi react good thing
மலையாள நடிகையான பார்வதி, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர். தமிழிலும் இவர் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூரு நாட்கள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு மலையாளத்தைப் போல் தமிழிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது படப்பிடிப்புகள் இல்லாததால் இவர் கேரளாவைச் சுற்றியுள்ள கொச்சின், பனம்பள்ளி போன்ற பகுதிகளுக்கு காரில் பயணம் மேற்கொண்டார்.

அப்போது அவர் சென்ற பாதையில், மின்சாரக் கம்பி ஒன்று வாகனங்கள் மீது விழும் நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்ட பார்வதி உடனே தன் காரை அப்படியே நிறுத்தியுள்ளார்.
அங்கேயே சாலையில் நின்று மற்ற வாகனங்களை அப்பகுதியில் வாகனங்கள் செல்ல வேண்டாம் என ஓட்டுனர்களைக் கூறி அவர்களை மாற்றுப்பாதையில் செல்லும் படி அறிவுறுத்தியது மட்டுமன்றி, மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து அதை சரி செய்யும் வரை அங்கேயே இருந்து வாகன ஓட்டிகளுக்கு தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தாராம்.

பொதுவாக இதுபோன்ற செயல்களை ஆண்களே செய்ய வேண்டாம் என விட்டு விட்டுப் போகும் நிலையில். ஒரு முன்னணி கதாநாயகியாக இருந்து கொண்டு இவர் செய்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
