களவாணி, கலகலப்பு, மெரினா, மூடர்கூடம், மத யானைக்கூட்டம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா களம் இறங்கினார். யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. 

முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான். அந்த நிகழ்ச்சி மூலம் பெரும் புகழ் கிடைத்தாலும், அதன் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஓவியாவிற்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. ஆனால் இன்றுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே தி பெஸ்ட் என்ற பெயர் எடுத்தவர் ஓவியா மட்டும் தான். 

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 3வது சீசனை வெற்றிகரமாக முடித்துள்ள போதும், ஓவியா ஆர்மி அவரை பாலோ அப் செய்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஓவியா, அதில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். 

சுடிதார், பிங்க் நிற கவுன் என விதவிதமான உடைகளில் பொம்மை போல் அழகாக காட்சியளிக்கிறார். ஓவியாவின் இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் அதை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.