Asianet News TamilAsianet News Tamil

Nidhi Agarwal : ஆணுறை விளம்பரத்தில் நிதி அகர்வால்... வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Nidhi Agarwal : முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு சினிமாவில் உயர்ந்துள்ள நடிகை நிதி அகர்வால், ஆணுறையை விளம்பரப்படுத்தி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

Actress Nidhi Agarwal Promotes condom ad in social media
Author
Tamil Nadu, First Published Apr 14, 2022, 11:47 AM IST

'முன்னா மைகேல்' என்கிற இந்தி படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நிதி அகர்வால். தமிழில் இவர் நடிப்பில் இதுவரை 'பூமி' மற்றும் 'ஈஸ்வரன்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸ் ஆகின. இப்படங்கள் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. 

தமிழில் இவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் ஃபிளாப் ஆன போதும், இவருக்கான ரசிகர் கூட்டம் குறையவில்லை. குறிப்பாக சென்னையில் உள்ள இவரது ரசிகர்கள் இவருக்காக கோவில் காட்டிய சம்பவமும் அரங்கேறியது. இந்த சம்பவம் முன்னணி கோலிவுட் நடிகைகளையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

Actress Nidhi Agarwal Promotes condom ad in social media

இதைத் தொடர்ந்து, தற்போது நடிகை நிதி அகர்வால் கைவசம் ஒரு படம் மட்டுமே உள்ளது. அதன்படி இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நிதி அகர்வால். இதுதவிர தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் 'ஹரிஹர வீர மல்லு' படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார்.

இவ்வாறு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு சினிமாவில் உயர்ந்துள்ள நடிகை நிதி அகர்வால், ஆணுறையை விளம்பரப்படுத்தி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆணுறையை விளம்பரப்படுத்தி அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பணத்துக்காக இப்படியா செய்வது என அவரை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Priya Bhavani shankar : உள்ளாடை சைஸ் என்ன... அத்துமீறிய நெட்டிசனுக்கு தரமான பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்

Follow Us:
Download App:
  • android
  • ios