பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும், 'சூப்பர் மாம்' சீசன் 2 நிகழ்ச்சியில் தன்னுடைய மகளுடன் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை நீபா, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளோடு கலந்து கொள்ளும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதே போன்று ஒரு நிகழ்ச்சி தான் 'சூப்பர் மாம்'. தங்களுடைய குழந்தைகள் பெற்றோர்களை உட்சாக படுத்த, பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற எப்படி பட்ட டாஸ்காக இருந்தாலும் பிரபலங்கள் ரியல் ஹீரோயினாக மாறி அதனை செய்வார்கள்.

ஆனால் சில சமயங்களில், துரித பாதுகாப்பு இருந்தும் அவர்களுக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, காயங்கள் ஏற்படுகிறது. 

அது போன்ற ஒரு விபத்தில் தற்போது நடிகை நீபா சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும், தண்ணீருக்கு நடுவே வைக்கப்பட்டுள்ள பேரலை தாண்ட வேண்டும். ஐந்து பேரலை வெற்றிகரமாக தாண்டிய நீபா, ஆறாவது பேரலை தாண்ட மிகவும் யோசித்தார். தொகுப்பாளர் விழுந்தால் தண்ணீரில் தான் விழுவாய், தண்டு, தண்டு என கூற , நீபாவும் தாண்ட முயற்சித்த போது, கால் எட்டாமல் கீழே விழுந்தார். 

இந்த விபத்தில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, மயங்கி தண்ணீரில் விழுந்தார். பின்னர் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் மருத்துவமனையில் இருந்து இந்த நிகழ்ச்சியை தொடர முடியாது என்பதால், நீபா இந்த சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

நீபா, கோரிப்பாளையம், காவலன் உள்ளிட்ட பட திரைப்படங்களிலும், மானாட மயிலாட போன்ற டான்ஸ் நிகழ்ச்சிலும் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெளியாகியுள்ள ப்ரோமோ இதோ...