நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே பிளவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதை அவர்கள் இருவரும் மறுத்துள்ளனர்.  தமிழ் திரை  நடிகைகளில்  சூப்பர் ஸ்டார் நடிகையாக  வளம் வருகிறார் நடிகை நயன்தாரா ,  எத்தனை நடிகைகள் திரைக்கு வந்தாலும் முதலிடம் தனக்கே என தன் அழகாலும் நடிப்பாலும்,   திறமையாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் நயன்தாரா.  இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா,  விக்னேஷ் சிவனுடன் இணைந்து நடித்த போது  இருவருக்கும் காதல் மலர்ந்தது இருவரும் வெளிப்படையாக காதலிக்கிறோம் என அறிவித்து  ஊர் சுற்றி வருகின்றனர். 

பிறந்தநாள் கொண்டாட்டம்,  வெளிநாடு சுற்றுப்பயணம் ,  ஆன்மீகப்பயணம் என எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே சென்று வருகின்றனர் .  அதற்கான புகைப்படங்களை விக்னேஷ்  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் .   சமீபத்தில் முக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நயன்தாரா சுசீந்திரம் கோவில் ,  பகவதி அம்மன் கோவில் ,  உள்ளிட்ட  தளங்களுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்றுவந்தார் .  கிறிஸ்மஸ் பண்டிகையை இருவரும் இணைந்து கொண்டாடினர் சமீபத்தில் நடந்த தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் நயன்தாரா மட்டும் தனியாக வந்திருந்தார்.  அது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .  எங்கு சென்றாலும் காதலருடன் வரும்  நயன்தாரா இந்நிகழ்ச்சிக்கு மட்டும்  விக்னேஷ் சிவன் இல்லாமல் வந்திருந்தது ,  இருவருக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது என்றும்  இருவரும் பிரிந்து விட்டார்கள் என்ற அளவிற்கு பரபரப்பானது.  

திருமணத்திற்கு விக்னேஷ் சிவன் நயன்தாராவை  வற்புறுத்தியதால் இருவரும் பிரிந்துவிட்டதாகவும்  தகவல்கள் வெளியானது. இந்நிலையில்  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பில்  இது முற்றிலும் பொய்யான தகவல் என மறுத்துள்ளனர் .  நடந்து முடிந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கூட இருவரும் ஒன்றாக இருந்தனர் .  விக்னேஷ்தான்  நயன்தாராவை  புகைப்படம் எடுத்தார் பட வேலைகளில் அவர் பிசியாக  இருப்பதால் அந்த  விருது வழங்கும் நிகழ்ச்சியில்  நயன்தாராவுடன் விக்னேஷால்  கலந்து கொள்ள இயலவில்லை என  தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.