மிக விரைவில்  ரிலீஸாகவிருக்கும் ‘கொலையுதிர்காலம்’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னை ஹில்டன் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. அந்நிகழ்வில் நடிகை நயன்தாராவை சிலர் எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் ஒப்பிட்டுப் பேசுவதை நடிகர் ராதாரவி கண்டித்தார்.

முதலில் விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “என்னை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தூக்கிட்டாங்க, நான் இப்ப வெறும் தயாரிப்பாளர்தான்! என்னைப் போயி பிரதிநிதின்னுசொல்லிட்டிங்களே! குஷ்டரோகியாக வாழ்ந்தாலும் வாழ்ந்துடலாம்.ஆனா தயாரிப்பாளரா மட்டும் இருக்கவே கூடாது. தெரியாம பெடரேஷன் மீட்டிங் போயிட்டேன். அங்கே தயாரிப்பாளர் சங்க செகரட்டரி கதிரேசன் வாட்ச்மேன் வேலை பார்த்திட்டு இருந்தார்.மீடியேட்டர்லாம் மரியாதையுடன் போய் உக்கார்ந்து பேசுறாங்க. தயாரிப்பாளர்கள் மட்டும் வெளியேவெயிட்டிங்.  

பெப்சி ஆபிசுக்குப் போனா அங்கே சுவாமிநாதன் என்கிற ஆள் அதிகாரம் பண்றார்.நான் யாரை வேலைக்கு வைக்கனும்னு சொல்றதுக்கு அந்த ஆள் யாருங்க?( பலே வெள்ளையத்தேவா!) கறிச்சோறு போடணும்னு கம்பல் பண்றாங்க, இதையெல்லாம் கேட்கிறதுக்கு  தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஆண் மகன் தேவைங்க!”என்று வழக்கம்போல் அதிரடியாகப் பேசினார்.

அவருக்கு அடுத்து பேசிய ராதாரவி “தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மட்டுமா பிரச்னைகள் இருக்கு?தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் அதே பிரச்னைகள்தானே!நிர்வாகம்னா எல்லாத் தரப்பையும் கேட்கனும்ல. சங்கத்துப் பிரச்னைகளை குடும்ப பிரச்னை மாதிரி அணுகனும்னா அங்கே எதுக்கு பத்திரிகையாளர்களை வரவழைச்சு பேசுறீங்க? 

சுரேஷ்காமாட்சி இங்க  பேசுனார்.அத கேட்டு திருந்திடவா போறாங்க.! படங்களை முடிஞ்சா ரிலீஸ் பண்ணுங்க.இல்லேன்னா தமிழ் ராக்கர்சுக்கு வித்திடுங்க.உங்களால் தமிழ் ராக்கர்சை பிடிக்க முடிஞ்சிதா?ஓட்டுப் போட பணம் வாங்காதேன்னு சொல்றாங்க. இவன் காச வாங்கிட்டுத்தான் போடுவான். எவன் திருந்தினான்? இங்க நயன்தாராவை எம்.ஜி.ஆர் ,சிவாஜிக்கு நிகரா ஒப்பிட்டுப் பேசினாங்க. அவங்க லெஜண்ட்ஸ்.அவங்களோடல்லாம் கம்பேர் பண்ணாதிங்க!

இப்பல்லாம் 90 எம்.எல் படங்களைத் தான் ரசிக்கிறாங்க. பிக்பாஸ்ல ஒரு பொண்ணு வந்துச்சே ஓவியாவா? நல்ல பேரு. அதுக்கு வாய்த்த வாய்ப்பை பாருங்க. நமக்கெல்லாம்  90 எம்.எல் செட் ஆகாது.நான் எடுத்தா ஒன்னரை லிட்டர்னுதான் எடுப்பேன்.”என்றார்.