actress nandhi comeback for acting
வெள்ளித்திரையில் காமெடி நடிகையாக அறிமுகமாகி, பின்னர் பிரபல தொலைக்காட்சி மூலம், சீரியல், காமெடி ஷோ என கலக்கியவர் நடிகை நந்தினி.
இவர் கடந்த ஆண்டு கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக சில மாதங்கள் மட்டுமே இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர்.
இந்நிலையில் இவருடைய கணவர் கார்த்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துக்கொண்டார். இவருடைய தற்கொலைக்கு முழு காரணமும் மைனாதான் என கார்த்திக் தரப்பினர் கூறி வந்தனர்.
இதனால் மனமுடைந்த நந்தினி இதுநாள் வரை எந்த ஒரு ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தார். தற்போது மீண்டும் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் என் கணவர் கார்த்திக்கிற்கு நான் வீட்டில் சும்மா இருப்பதும் நான் அழுதுக்கொண்டு இருப்பதும் சுத்தமாக பிடிக்காது. நான் வீட்டில் இருந்தால் அவர் நினைப்பில் இருந்து என்னால் சத்தியமாக வெளியே வரமுடியாது. அதனால் தான் மீண்டும் படப்பிடிப்பில் காலத்து கொள்ள உள்ளேன் என உணர்ச்சிவசமாக கூறியுள்ளார்.
