கூட்டத்தில் ராகுலின் அழகை வர்ணித்து பாடிய நக்மா....! அதுவும் தமிழ் பாட்டு தானுங்கோ

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா பட பாடலான "நீ நடந்தால் நடை அழகு..நீ சிரித்தால்  சிரிப்பழகு என்ற பாடலை பாடலை, ராகுலுக்காக பாடி அசத்தி உள்ளார் அகில இந்திய  மகளிரணி காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா.

புதுச்சேரியில் சோரப் பட்டு கிராமத்தில் காங்கிரசாருக்கு  நடந்த பயிற்சி முகாமில்  கலந்துக்கொண்டு பேசிய நக்மா, அடுத்து இந்தியாவை ஆளும் தகுதி உடைய நபர்  ராகுல் தான்.அதற்காக காங்கிரசார் கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவித்து  இருந்தார்

இதற்கிடேயே  திடீரென  பாடலை பாடினார் நக்மா..... "நீ நடந்தால் நடை  அழகு...அழகு .. என்ற பாடலும்,ஸ்டைல் ஸ்டைலு  தான், சூப்பர் ஸ்டைலு  தான் என்ற பாடல் பாடினர்..

இது  விஷயம் அல்ல.. பாடலை பாடி முடித்தவுடன்,இந்த பாடல் ரஜினிக்கு அல்ல.... ராகுல் காந்திக்கு என கூறி உள்ளார்

கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் நக்மாவின் உற்சாக பாடலை கேட்டு  மெய் சிலிர்த்து விட்டனர்