குஜராத்தை சேர்ந்த பிரபல நடிகை மோனல் கஜார், தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த 'சிகரம்தொடு', கிருஷ்ணா நடித்த 'வானவராயன் வல்லவராயன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி ஆகிய மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

இவர் சமீபத்தில் அகமதாபாத்திக்கு ஷூட்டிங் சென்றுள்ளார். அப்போது சிறிது நேரம் காரை ஒரு தெருவோரம் நிறுத்தியுள்ளார். இவர் எதிர்பாராத நேரத்தில் அந்த பகுதியில் கடை வைத்திருக்கும் ஒரு நபர் நடிகையின் கார் முன்பு வந்து சிறு நீர் கழித்துள்ளார். 

அவரின் இந்த முகம்சுழிக்கும் செயலைக் கண்டு ஷாக் ஆன நடிகை மோனல் கஜார், தன்னுடைய காரில் உள்ள ஹார்ரனை ஓயாமல் அடித்துள்ளார். ஆனால் அந்த நபர் அதனை சற்றும் கண்டுக்கொள்ளாமல் நடிகையின் அருகில் வந்து ஏன் ஹார்னை அடித்தாய் என அசிங்கமாக திட்டியுள்ளார். 

அந்த நபரின் இந்த செயலை நடிகை மோனல் கஜார், தன்னுடைய கைபேசியில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். மேலும் அந்த நபர் மீதும் போலீசாரிடமும் புகார் கொடுத்தார். 

மோனல் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்த போலீசார் பொது இடத்தில் அசிங்கமாக நடந்துக்கொண்டது பெண்ணின் கண்ணியத்திற்கு எதிராக நடந்து உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். 

வீடியோ: