actress mekna raj issue

'தமிழில் காதல் சொல்ல வந்தேன்', 'உயர் திரு 420 ' ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மேக்னா ராஜ். இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தற்போது, மலையாளம் கன்னடம் ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் இயக்குனர் ரமேஷ் இயக்கத்தில் 'ஜிந்தா' என்கிற கன்னட படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் டீசர் வெளிவந்தது இதில் ஆண்களை மேக்னா ராஜ் இழிவாக பேசுவது போல் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேக்னா ராஜ் வீடு அமைந்துள்ள பெங்களூருவில் சிலர் முற்றுகையிட்டு, அவரை மன்னிப்பு கேர்க்கோரி கோஷமிட்டனர்.

அப்போது வீட்டில் இருந்த மேக்னா வெளியே வந்து, கதைக்கு தேவைப்பட்டதால் தான் இந்த காட்சி வைத்துள்ளதாகவும், நீங்கள் படம் வெளியாகியதும் படத்தை பார்த்து விட்டு கூறுங்கள் என கூறியுள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ளாமல் போராட்டக்காரர்கள் கோஷமிடவே, போலீசார் அங்கு வந்து அவர்களின் கூட்டத்தை கலைத்தனர்.