actress mega akash is director director daugther

விளம்பர மாடல்

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இதில் அறிமுக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். அட இவரை எங்கோ பார்த்தது போல இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால் அது சரி. இவர் மீரா சீயக்காய் விளம்பரத்தில் நடித்திருப்பார். இது தவிர இன்னும் ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

மேகா ஆகாஷ்

என்னை நோக்கி பாயும் தோட்டாவிலிருந்து மறு வார்த்தை பேசாதே என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிலிருந்து தமிழக இளைஞர்களை மறு வார்த்தை பேச விடாமல் உற்று நோக்க வைத்தவர் தான் மேகா ஆகாஷ். 

வாய்ப்புகள்

இவர் தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் நடித்து ஒரு படம் கூட வெளிவரவில்லை என்றாலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இயக்குநர்

இந்நிலையில் மேகா ஆகாஷின் அம்மா பற்றிய ஒரு சுவாரசிய தகவல் வெளிவந்துள்ளது.இவரின் அம்மா ஒரு இயக்குநராம். பல விளம்பர படங்களை இயக்கியுள்ளாராம்.இவருடைய ஆலோசனைப்படியே மேகா படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம்.