'சூத்ரதாரன்' என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி, நடிகர் மாதவனுக்கு ஜோடியாக 2002 ஆம் ஆண்டு, 'ரன்' படத்தில் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர், நடிகை மீரா ஜாஸ்மின்.

இந்த படத்தை தொடந்து, 'பாலா', 'புதியகீதை', 'ஆஞ்சிநேயா' ,என பல தமிழ் படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக மாறினார்.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளத்தில் இவர் நடித்த "பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்' என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது உளப்பட பல விருதுகளை பெற்றார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில காலம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார். மேலும் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான 'சண்டக்கோழி 2 ' மற்றும் நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கும் 'பூமரம்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

இப்படங்களில் உடல் எடை அதிகரித்து, காணப்பட்ட மீரா ஜாஸ்மின் தற்போது, தீவிர உடல்பயிற்சி மேற்கொண்டு, ஸ்லிம் பிட்டாக காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் மிகவும் குண்டாக இருந்த இவரா இப்படி என தற்போதைய முன்னணி நடிகைகளே..  மூக்கின் மீது விரல் வைக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.