நடிகை மீனா எனக்கு அவரை மாதிரி மாப்பிள்ளை பாருங்கம்மான்னு சொன்னேன் என்று ஓப்பனாகப் பேசியது வைரலாகப் பரவி வருகிறது.

கல்யாணம் செய்துகொண்டால் அந்த பாலிவுட் நடிகரைப் போன்ற ஒரு ஆளைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று இருந்தாராம் நடிகை மீனா. தனக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தபோது அம்மாவிடம் கூட மாப்பிள்ளை அவர் மாதிரி வேண்டும் என்று சொன்னதாகும் நடிகை மீனா வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

90 களில் தமிழ் திரை உலகில் ரசிர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினியுடன் 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், பின்னால் ரஜினி நடித்த பல படங்களில் அவருக்கே ஜோடியாக நடித்தார். அடுத்தடுத்து அன்று முன்னணியில் இருந்த நடிகர்கள் ஒவ்வொருவருடனும் ஜோடி சேர்ந்தார் மீனா.

உ.பி.யில் தலைவர் அலப்பறை! முதல்வர், ஆளுநருடன் சந்திப்பு... நாளை அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு!

ரஜினி, கமல் இருவரும் கோலோச்சி வந்த காலத்திற்குப் பின் விஜய், அஜித் நடித்த பல வெற்றிப் படங்களிலும் ஜோடியாக நடித்து அசத்தி இருக்கிறார். இப்போது மீனாவின் மகள் நைனிகாவும் 'தெறி' படத்தில் நடிகர் விஜயுடன் சேர்ந்து நடித்துள்ளார். சமீபத்தில் கணவரை இழந்துள்ள மீனா பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

பேட்டியில் மனசைத் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கும் மீனா, பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மீது தனக்கு இருந்த அளவில்லாத ஆசை அப்பட்டமாகக் கூறியிருக்கிறார். பேட்டி எடுத்தவர் ரித்திக் ரோஷன் புகைப்படத்தைக் காட்டிய உடனே உணர்ச்சிவசப்பட்டு அவரைப்பற்றி பேசத் தொடங்குகிறார்.

"எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அந்த போட்டோ எடுத்தப்போ என் இதயமே நொறுங்கிடுச்சு. அவருக்கு அன்னக்கி கல்யாணம். எனக்கு அப்போ கல்யாணம் ஆகல. என் அம்மா கிட்ட கூட ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளை பாருங்கம்மான்னு சொன்னேன்" என்று ஓப்பனாகப் பேசி இருக்கிறார் மீனா. நடிகை மீனாவின் இந்த வெளிப்படை பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி! டிசம்பர் வரை உள்நாட்டுத் தேவையை சமாளிக்க நடவடிக்கை