உதயநிதி ஸ்டாலின் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம், காமெடி நடிகையாக அறிமுகமானவர் ஜாங்கிரி மதுமிதா. இந்த படத்தில் இவர் சந்தானத்துடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதிலும் குறிப்பாக காதலியாக நடித்த மதுமிதாவை, 'அட அட தேன் அட' என கொஞ்சும் காட்சிகள், லட்டு ஜாங்கிரி பூந்தி என கொஞ்சும் காட்சிகளுக்கு வயிறு வலிக்க சிரித்தனர் ரசிகர். இந்த படத்திற்கு பின் மதுமிதா ஜாங்கிரி மதுமிதாவாகவே மாறிவிட்டார்

.

இந்த படத்தை தொடர்ந்து காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் அஜித் நடித்து வெளியான 'விஸ்வாசம்' படத்தில் கூட நடித்திருந்தார். தற்போது 35 வயதாகும் இவருக்கு திருமண நடைபெற உள்ளது.

அதாவது இவருடைய திருமணம்  பிப்ரவரி, 15ம் தேதி, சென்னை, கோயம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது.  இவர் திருமணம் செய்து கொள்ளப்போவது இவரது தாய்மாமன் மகன் மோசஸ் ஜோயல் என்பவரை தான். குறும்பட இயக்குநரான இவர், பிரபல இயக்குநரிடம் உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.