Asianet News TamilAsianet News Tamil

நடிகை மந்த்ராவின் வீடுகளில் அதிரடி சோதனை...விரைவில் சிக்கவிருக்கும் தோழி நடிகைகள்...

அஜீத்தின் ‘ரெட்டை ஜடை வயசு’, விஜய்யின் ’லவ் டுடே’உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை மந்த்ரா. படு கிளாமரான வேடங்களில் வெளுத்துக்கட்டிய இவர் 90 களில் தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். பின்னர் அக்கா, அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்களில் அவ்வப்போது நடித்து வந்த கலர்ஸ் நிறுவனத்தின் விளம்பரப்படங்களிலும் நடித்த பின்னர்தான் அந்நிறுவனத்தின் உரிமையாளர் மந்த்ராவின் நெருங்கிய உறவினர் என்பது வெளியே தெரிய வந்தது.

actress manthra home raided by income tax officials
Author
Chennai, First Published Nov 2, 2019, 11:01 AM IST

90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மந்திராவின் வீடுகளில் கடந்த ஒரு சில தினங்களாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதாகவும் அப்போது பல விலை மதிப்பு மிக்க ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.actress manthra home raided by income tax officials

அஜீத்தின் ‘ரெட்டை ஜடை வயசு’, விஜய்யின் ’லவ் டுடே’உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை மந்த்ரா. படு கிளாமரான வேடங்களில் வெளுத்துக்கட்டிய இவர் 90 களில் தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். பின்னர் அக்கா, அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்களில் அவ்வப்போது நடித்து வந்த கலர்ஸ் நிறுவனத்தின் விளம்பரப்படங்களிலும் நடித்த பின்னர்தான் அந்நிறுவனத்தின் உரிமையாளர் மந்த்ராவின் நெருங்கிய உறவினர் என்பது வெளியே தெரிய வந்தது.actress manthra home raided by income tax officials

உடல் குறைப்பு, வனவனப்பு போன்றவற்றிற்கு ஆலோசனைகள் வழங்கி வந்த கலர்ஸ் நிறுவனத்தின் பல்வேறு தமிழகம் மற்றும் ஆந்திரா முழுக்க உள்ளன. இந்நிறுவனத்தின் சொத்துக்குவிப்பு குறித்து வருமான வரித்துறையினருக்கு சில துப்புகள் கிடைக்கவே அவர்களது அவைத்துக் கிளைகளிலும் கடந்த சில தினங்களாகவே வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனைகள் நடத்தி பல ஆவணங்களைக் கைப்பற்றி வருகின்றனர். இந்த சோதனைகளில் நடிகை மந்த்ராவின் சென்னை மற்றும் ஆந்திர மாநில வீடுகளும் தப்பவில்லை. மிக விரைவில் மந்திராவின் தோழி நடிகைகள் சிலரும் சோதனைக்கு ஆளாவார்கள் என்று சொல்லப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios