மலையாளத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான 'கலியூஞ்சல்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015  ஆண்டு வெளியான 'ஒரு வடக்கன் செல்பி' படத்தில் கதாநாயகியாக மாறினார்.

தற்போது மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மஞ்சிமா மோகன், நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான ' அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, இவருக்கு தமிழ் மொழியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த, 'சத்திரியன்' , இனிமே இப்படித்தான்' ஆகிய படங்கள் இவருக்கு வெற்றிபெறவில்லை. தற்போது தேவராட்டம், மட்டும் நடிகர் ஜீவாவுடன் பெயரிடாத படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

ஏற்கனவே மஞ்சிமா மோகன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து  "ஜெயலலிதாவின் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவர் நான் தான். இதை நான் கூறவில்லை, பிரபல இயக்குனர் கெளதம் மேனன் கூறினார்".

அவருடைய சாயல் என்னிடம் உள்ளதாக கூறி, கெளதம் மேனன் இயக்கி வரும் வெப் சீரிஸில் நடிக்க அழைத்தார். அப்போது தன்னிடம் மூன்று படங்கள் இருந்தது. அவர் கேட்ட மூன்று மாதங்களும் படப்பிடிப்பு இருந்ததால் நடிக்க முடியவில்லை. எனினும் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் நடிக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.