தளபதி விஜய் நடித்து வரும், 64 ஆவது படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் உள்ள சிவமோகாவில் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மீதம் உள்ள காட்சிகளை, சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதன்படி தளபதி விஜய், நடிகர் விஜய் சேதுபதியுடன் மோதிய சண்டை காட்சியை முடித்த பின், கிறிஸ்துமஸ் தினத்தை குடும்பதோடு கொண்டாட, லண்டன் சென்றதாக கூறப்பட்டது.

இதை தொடந்து, விஜய் சேதுபதியுடன் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை மாளவிகா மோகன், சண்டை போடும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது புதிதாக சமூக வலைத்தளத்தில் கசிந்து ரசிகர்களால் பரபர என்று பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு, வரும் 31 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தளபதி விஜயின் உறவினர், ஸேவியர் பிரிட்டோ இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.