தளபதி விஜய் தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும், 64 ஆவது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் முடிவடைந்ததை அடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, டெல்லியில் நடந்து வருகிறது. 

இந்த படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நடிகை மாளவிகா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். 

இந்த படத்தில் கமிட் ஆனதில் இருந்து இவர் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதுதான் பிரச்சனைக்கு காரணம் .

பொதுவாக, பெரிய நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி விட்டால், நடிகைகள் இயக்குனரின் அறிவுரை படி தங்களுடைய கெட்டப் எந்த விதத்திலும் வெளியாகி விட கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.

ஆனால் தளபதி 64 படத்தில் கதாநாயகியாக நடித்து வரும், மாளவிகா மோகன், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் முன்பை விட அதீத கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு அதகளம் செய்து வருகினார். இவரின் இந்த செயல் தளபதி விஜய் மற்றும் படக்குழுவையும் அதிருப்தி ஆக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் பட நாயகி இவ்வளவு கவர்ச்சி காட்டுவது, அவருடைய இமேஜை பாதிப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். எனவே பலர் நடிகை மாளவிகா மோகனை சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

பெரிய நடிகர் படத்தில், ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தால் அதனை அமைதியாக இருந்து தக்க வைத்து கொள்ளமல், அந்த பெரிய நடிகர், மானத்தையே கொஞ்சம் கொஞ்சமா கப்பல் ஏத்துது இந்த நடிகை... இது தான் படக்குழுவின் மைண்ட் வாய்ஸ்னு கோடம்பாக்கத்துல ஒரு பேச்சு பாஸ்.