தல அஜித்தின் ரசிகர்கள் எது செய்தாலும் அது சமூக வலைத்தளத்தில் வைரலாகிவிடும். குறிப்பாக, தலயின் பிறந்தநாள் முதல், அவருடைய மகள், மகன், மனைவி ஷாலினி என அனைவருடைய பிறந்தநாள் அன்று தலயின் ரசிகர்கள் பல்வேறு சமூக பணிகள் செய்து அஜித்தின் பெயரை நிலைநாட்டி வருகின்றனர்.

அதே போல், மற்றொரு தரப்பை சேர்ந்த சில ரசிகர்கள்... செய்யும் ஒரு சில விஷயங்கள் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில், அஜித்தின் நற்பணி  இயக்கத்தின் சார்பாக அவருடைய ரசிகர்கள் அஜித்தின் மாஸ் புகைப்படம் பதித்த, இந்த வருட காலெண்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த காலெண்டரை, பிரபல காமெடி நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியில் வெளியேறிய பிரபலமுமான, மதுமிதா அவருடைய கணவருடன் சேர்ந்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை, மதுமிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட  சமூக வலைத்தளத்தை தீயாய் சுற்றி வருகிறது.