பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை மதுமிதா கடந்த வாரம் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால்,  பிக்பாஸ் வீட்டின் விதியை மீறினார் என்பதற்காக திடீரென வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறியது ரசிகர்களை மட்டுமின்றி, தொகுப்பாளர் கமல்ஹாசனையும் மிகுந்த கவலையில் ஆழ்த்தியது.

மேலும் உங்களுடைய போராட்டத்தை அகிம்சை முறையில் கொண்டு சென்றிருக்க வேண்டும் என மதுமிதாவுக்கு அறிவுரையையும் கொடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடை கொடுத்து அனுப்பி வைத்தார் கமல்ஹாசன். பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த மதுமிதா, அகம் டிவி வழியாக உள்ளே உள்ள போட்டியாளர்களை சந்தித்த போது, கஸ்தூரி மற்றும் சேரனை தவிர யார் முகத்தையும் பார்க்க விருப்பவில்லை என கூறியது,  அவர் மற்ற போட்டியாளர்களால் எந்த அளவிற்கு, மனம் நொந்து போய் உள்ளார் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் மதுமிதா எப்படி உள்ளார் என்பதை தெரிவித்துள்ளார். பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பிரபல நடிகர் டேனி. இதுகுறித்து அவர் கூறுகையில்,  மதுமிதா தன்னிடம் பல விஷயங்களை கூறவில்லை என்றும்,  இதற்கு முக்கிய காரணம் பிக்பாஸில் போட்டுள்ள அக்ரிமெண்ட் தான்.  ஆனால் அவருடைய கையை  பார்த்ததும் தன்னுடைய கண்கள் கலங்கி விட்டதாகவும்,  கையில் ஏற்பட்ட காயத்தால் மது வலி தாங்காமல் துடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.