1980களில் தென்னிந்திய திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய முன்னணி நடிகர், நடிகைகளின் ரீயூனியன் நிகழ்ச்சி மகிழ்ச்சியாக நிறைவடைந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள மெகா ஸ்டார் சிரஞ்சீவி வீட்டில் நடைபெற்ற பார்ட்டில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியைச் சேர்ந்த 80’ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஹீரோ, ஹீரோயின்கள் பங்கேற்றனர். 

இதில் சிரஞ்சீவி, மோகன்லால், நாகார்ஜுனா, பாக்யராஜ், வெங்கடேஷ், ஜாக்கி ஷெஃராப், ரமேஷ் அரவிந்த், ரகுமான், குஷ்பூ, சுஹாசினி, ஜெயராம், ராதா, ராதிகா, பூர்ணிமா, அமலா, சரிதா, சரத்குமார், ஷோபனா, நதியா உள்ளிட்டோர் கறுப்பு மற்றும் தங்க நிற உடையில் பங்கேற்றனர். எவர் கிரீன் நாயக, நாயகிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அதிகம் கவனம் ஈர்த்தவர் குஷ்பூ. 

80களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என எல்லா மொழி சூப்பர் ஸ்டார்களுடனும் ஜோடி போட்டவர் குஷ்பூ. இப்போது இந்த ரீயூனியன் நிகழ்ச்சி மூலம் மீண்டும் 80ஸ் நாயகர்களுடன் செல்ஃபி மூலம் ஒரு ரவுண்ட் வந்துள்ளார். சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், ஜெயராம், சரத்குமார்,ஜாக்கி ஷெஃராப் உள்ளிட்ட நடிகர்களுடன் குஷ்பூ எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோக்கள் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.


 

இதையும் படிங்க: சிரஞ்சீவி வீட்டில் கூடிய 80’ஸ் கிட்ஸ்... செம்ம வைரலாகும் ரீயூனியன் போட்டோஸ்...!

நடிகர் ஜெய்ராம் தவிர கறுப்பு உடையில் இருக்கும் ஹீரோக்களுடன் தங்க நிற உடையில் மின்னும் குஷ்பூவின் புகைப்படங்கள் 80’ஸ் கிட்ஸ்களை கவர்ந்து வருகிறது. குஷ்பூ தனது இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகின்றன.