ஜெமினி படம் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அதன் பின்னர் வில்லன், அன்பே சிவம், திருமலை, வில்லன் உள்ளிட்ட பல படங்களில்ம் நடித்தார். தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார். 

அந்த படத்தை தொடர்ந்து அம்மா, அக்கா வேடங்களில் நடிக்க கிரணுக்கு வாய்ப்பு தருவதாக தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்றனர். என்ன தான் இருந்தாலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த கிரண், அனைத்து வாய்ப்புகளுக்கும் நோ சொன்னார். தற்போது 38 வயதாகும் கிரண் சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட ரவுடி பேபி பாடலுக்குன் கிரண்பேடி போட்ட சூப்பர் வீடியோ இணையத்தில் அதிரடி காட்டியது. 

என்னதான் அதிரிபுதிரி கவர்ச்சி காட்டினாலும் பட வாய்ப்புகள் கிடைத்ததாக தெரியவில்லை. இருந்தாலும் எப்படியாவது பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்று தீர்மானித்துள்ள கிரண். இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா என்ற வகையில் செம கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


பட வாய்ப்புக்காக என்ன தான் வளைச்சி, வளைச்சி கிரண் கவர்ச்சி போஸ் கொடுத்தாலும், இந்த வயசில உங்களுக்கு இது தேவையா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.