கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனையால் போடப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, வெளியில் எங்கும் செல்லமுடியாமல் வீட்டிலேயே... முடங்கி இருக்கும் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய அழகிய நாய் குட்டியுடன் பொழுதை ஜாலியாக கழித்து வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்:

நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகமான புதிதில் இவர் நடித்து வெளியான படங்கள் தோல்வியடைந்தாலும், தற்போது சிறந்த நடிகை என்கிற இடத்தை பிடித்து விட்டார். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை திரைப்படங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.

எந்த நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்பு:

பொதுவாக திரையுலகில் அறிமுகமாகும் அணைத்து நடிகைகளுக்கும், எளிதில் விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவது இல்லை. ஆனால் கீர்த்தி சுரேஷுக்கு இப்படி பட்ட வாய்ப்புகள் ஒரு சில வருடங்களிலேயே கிடைத்தது.

அந்த வகையில் விஜய்யுடன் பைரவா , சர்க்கார் என இரண்டு படங்களில் நடித்தார். மேலும் சூர்யா, விஷால், தனுஷ், விக்ரம், என அடுத்தது பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து விட்டார்.  

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு:

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, 'மகாநடி' திரைப்படம், இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில், சாவித்திரியாகவே வாழ்ந்து நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ் என இவரை பாராட்டாத பிரபலங்களே இல்லை.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'சாமி 2 ' மற்றும் 'சண்டக்கோழி 2 ' ஆகிய படங்கள் தோல்வி அடைந்தது. எனவே தற்போது தேர்வு செய்யும் படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

பாலிவுட் சென்ற கீர்த்தி:

தமிழ் திரையுலகில் நிலையான இடத்தை பிடித்ததும், பாலிவுட் பட வாய்ப்புகளும் இவருடைய வீட்டு கதவை தட்டியது. அந்த வகையில்  இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக பாலிவுட் படத்தில் நடிக்க கமிட் ஆனார். இதற்காக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு தன்னுடைய உடல் எடையை குறித்த. பின் ஒருசில காரணங்களால் இந்த படத்தை விட்டு கீர்த்தி சுரேஷ் விலகிவிட்டார்.

சூப்பர் ஸ்டாருடன் அண்ணாத்த:

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், அண்ணாத்த மற்றும் கார்த்தி சுப்புராஜ் தயாரிப்பில் குயின் ஆகிய படங்களில் நடித்துள்ள  கீர்த்தி, ஊரடங்கு ஓய்வை... தன்னுடைய செல்ல நாய் குட்டியுடன் கழித்து வருகிறார். மேலும் பாலிவுட் திரையுலகம் செல்வதற்காக எலும்பும்... தோலுமாக மாறிய உடலையும் தேற்றி வருவது, தற்போது வெளியாகியுள்ள அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் மூலம் தெரிகிறது.

View this post on Instagram

When my boy gets bored and I still enjoy that ! 🐶 #nykediaries

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on Apr 19, 2020 at 11:08pm PDT