கொரோனா தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கு ஓய்வு, பிரபலங்கள் பலரையும் அவர்கள் விரும்பிய வேலைகளை செய்ய வைத்துள்ளது.

ஏற்கனவே பாலிவுட் பிரபலங்கள், வீட்டில் வேலை செய்பவர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, தங்களுடைய வீட்டு வேலைகளை அவர்களே செய்ய துவங்கினர். மேலும் இதுகுறித்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் எடுத்து வெளியிட்டு ரசிகர்களிடம் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இன்னும் சில நடிகைகள் தினம் தினம், காலையில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ மற்றும் விதவிதமாக சமைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களையும் செய்து பார்க்குமாறு அறிவுறுத்தினார்.

நடிகை கீர்த்தி பாண்டியன்:

இந்நிலையில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின்  மகள், அவருடைய சொந்த ஊரில் உள்ள, சொந்த விவசாய நிலத்தில் ட்ராக்ட்டர் மூலம் ஏர் உழுத வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இவர், கடந்த ஆண்டு வெளியான ‘தும்பா’என்ற படத்தில் நாயகியாக நடித்தவர்.  இந்த படத்தை தொடர்ந்து அவருடைய அப்பா அருண் பாண்டியனுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அருண் பாண்டியன் மகளாகவே இவர் நடிக்க உள்ளார். இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஹெலன்' படத்தின், ரீமேக்காக எடுக்கப்பட உள்ளது.

வைரலாகும் வீடியோ:

விவசாய வேலை செய்யும் வீடியோவை வெளியிட்டு, நடிகை கீர்த்தி பாண்டியன் கூறியுள்ளதாவது... கொரோனா ஓய்வு காரணமாக மீண்டும் உழுவதற்கான வந்துவிட்டேன்.  எங்களுடைய நிலத்தில் உழுவது ஊரடங்கு உத்தரவை மீறிய செயல்   ஆகாது, இது தங்களது சொந்த நிலம், இது பொது இடம் கிடையாது என்றும் நாங்கள் ஊரடங்கு உத்தரவை மிகவும் மதிப்பவர்கள் என்றும் கூறியுள்ளார்.

அந்த வீடியோ இதோ: