பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனின் வளைகாப்பு விழா தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 

காவ்யா மாதவன் தனது முதல் குழந்தையை பிரசவிக்கக் காத்திருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு சற்று ஆச்சரியமான அனுபவம்தான். அவரது கண்ணைக் கவரும் வளைகாப்பு விழா மற்றும் விருந்து நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 

இந்தப் படங்களில் மகிழ்ச்சிக் களிப்பில் மிதக்கும் காவ்யா மாதவன் தேவதையாக ஜொலிப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆலப்புழையில் பிசியான படப்பிடிப்பில் இருந்த காவ்யாவின் கணவர் திலீப் இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக வீடு திரும்பினார். 

இது குழந்தை பிறப்புக்கான வளைகாப்பு நிகழ்ச்சி மட்டுமல்ல. காவ்யாவின் 34-வது பிறந்த தினத்தை முன்னிட்டும் இந்த விழா நடத்தப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிலையில் அவர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர். 

வயதையும், கருவுறுவதையும் மறைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் காவ்யா மாதவன் வித்தியாசமானவர்தான். மேலும் நடிகை ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த திலீப்பிற்கு குழந்தை பிறக்க உள்ளது ஆறுதலாக அமையும்