actress kasturi in dmk
அரசியலில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் நடிகை கஸ்தூரி விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் தனது கருத்தை ஆழமாக பதிவு செய்வதன் மூலம் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரபரப்பாகவும், பிரபலமாகவும் இருந்து வருகிறார் நடிகை கஸ்தூர
மிஸ் சென்னை பட்டம் வென்று அழகிப் போட்டியில் மட்டுமின்றி தமிழ் சினிமாத்துறையிலும் தன் தனிப்பட்ட திறமையால் வெற்றி பெற்றவர் நடிகை கஸ்துாரி. அரசியல், சினிமா உட்பட எந்தவொரு பிரச்னைகள் குறித்தும் சமீபகாலமாக தடாலடி கருத்துக்களை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

பொது வாழ்க்கைக்கு வந்த எந்த பெண்களையுமே எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற நிலையில் அரசியல் என்பது பெரிய களம். அதற்கு வீட்டினர் ஆதரவு இருந்தால் மட்டும் போதாது. எல்லோருடைய புரிதலும், ஆதரவும் இருக்க வேண்டும். அது இல்லாத போது பெண்களால் அரசியலில் வெற்றி பெறுவது கஷ்டம் என்று அண்மையில் மனம் திறந்து பேசியுள்ளார் கஸ்தூரி.
இவர் மீது அரசியல் கட்சிகளின் பார்வை சமீப காலமாக விழுந்திருக்கிறது. இந்த நிலையில் திமுக தலைமையின் குடும்ப உறவினர் ஒருவர், நடிகை கஸ்தூரியை சந்தித்து அரசியல் பேசியிருக்கிறார்.

இந்த சந்திப்பில், திமுகவில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடலாமே என கேட்டதாக அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஒரு வேளை கஸ்தூரி இதற்கு ஒத்துக் கொண்டால் திமுகவில் நட்சத்திர பெண் பேச்சாளர்கள் இல்லையே என்ற குறை நிச்சயமாக இல்லாமல் போகும்…
