அம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபாய்! அப்பல்லோவுக்கு மட்டும் ஒரு கோடியா? ட்விட்டரில் தெறிக்கவிடும் கஸ்தூரி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது சிகிச்சைக்கு ரூபாய் 6 . 85 கோடி செலவானதாக மருத்துவ நிர்வாகம் சார்பில் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தெரிவிக்கப்பட்டது.

 இதில், உணவுக்கு மட்டும் 75 நாட்களில் ரூபாய் 1  கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து  925 செலவு ஆகியிருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

இதனால் உணவு செலவை குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் பலர் தொடர்ந்து விமர்சித்தனர்.  இட்லிக்கு இவ்வளவு தொகையா என்று நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம், உள்ளிட்டோரின் படங்களுடன் மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தை தெறிக்கவிட்டது.

 

இந்நிலையில் நடிகை கஸ்தூரி அவர் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விமர்சித்துள்ளார். அம்மா உணவகத்தில் ஊருக்கே இட்லி ஒரு ரூபாய் அப்பலோவுக்கு மட்டும் இட்லி ஒரு கோடியா என கேட்டு நல்லா சொல்றீங்க கணக்கு என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.