பிக்பாஸ் ஒரு போலியான நிகழ்ச்சி. அதைவிட எனக்கு நிறைய வேலை இருக்கு. அதுமட்டுமில்லாமல் அந்த ஷோவில் கலந்துக்கிட்டு சம்பளம் வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகி விடும் என கூறி உள்ளார் கஸ்தூரி.

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது புதிய புதுப்பொலிவுடன் ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. தமிழில் முதன்முறையாக இவ்வாறு நடத்தப்படுவதால், இதனை பிரபலப்படுத்தும் விதமாக இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறக்கி உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்றுவந்த நடிகை கஸ்தூரியிடம், நெட்டிசன் ஒருவர், ‘ஏன் நீங்க பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக்கவில்லை.... வனிதாலாம் இருக்காங்க, நீங்க போயிருந்தா நல்லா இருக்கும். வைல்டு கார்டு எண்ட்ரியாக போக முயற்சிக்குமாறு கூறினார். 

இதற்கு பதிலளித்த கஸ்தூரி, “பிக்பாஸ் ஒரு போலியான நிகழ்ச்சி. அதைவிட எனக்கு நிறைய வேலை இருக்கு. அதுமட்டுமில்லாமல் அந்த ஷோவில் கலந்துக்கிட்டு சம்பளம் வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகி விடும்” என பதிலளித்தார்.

இதைப்பார்த்த மற்றொரு நெட்டிசன், ‘இது நீங்க 3-வது சீசனில் கலந்துக்கும்போது தெரியலையா?’ என கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு, “செத்தா தானே சுடுகாடு தெரியும்” என பதிலளித்தார் கஸ்தூரி. அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.