வலைதளங்களிலிருந்து ட்விட்டர் ஆப்புக்கு மட்டும் நிரந்தரமாக ஒரு ஆப்பு வைத்து விட்டால் அக்கா கஸ்தூரி தற்கொலை பண்ணிக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக்கு வெறிகொண்டு  தொடர்ந்து சர்ச்சைப் பதிவுகள் இடுவதும் அதற்குக் கிடைக்கும் எதிர்வினைகளை ரத்தம் சொட்டச் சொட்ட ரசிப்பதும் அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு தான் பாயம்மா கெட் அப்பில் இருக்கும் இரண்டு படங்களை வெளியிட்டு ரம்ஜான் வாழ்த்துகளைச் சொல்லும் செய்தியும் வலைதளங்களில் ‘இஸ்லாம் மதத்துக்கு மாறிய நடிகை கஸ்தூரி’ என்ற தலைப்பில் பரபரப்பாகி வருகிறது. அவர் விரும்பியதும் இந்த பரபரப்பைத்தான்.

கஸ்தூரி இரு புகைப்படங்களை வெளியிட்ட அப்பதிவில் ‘ரம்தான் கரீம்..நோன்பு இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒரு தெய்வீகப் பொருத்தமாக இம்மாதம் ஒரு முஸ்லிம் பெண் வேடத்தில் நடிக்கிறேன். இந்த சமயத்தில் இப்புகைப்படங்களை வெளியிடுவது பொருத்தமாக இருக்குமென்று தோன்றியது’ என்று பதிவிட்டிருந்தார்.

இப்பதிவுக்கு வழக்கம்போல், குறிப்பாக இஸ்லாமிய மக்களிடமிருந்து கஸ்தூரிக்குக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஒருவர் ‘பிரியாணி வேணும்னா நேரடியாக் கேக்க வேண்டியதுதான?. அதுக்கெல்லாமா இவ்வளவு கஷ்டப்பட்டு கெட் அப் போடணுமா??’என்று கமெண்டியிருக்கிறார்.