actress kasthuri mother and child are cancer patient

நடிகை கஸ்தூரி, எப்போதும் தன் மனதில் தோன்றும், அரசியல் கருத்துக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிவார். 

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர், திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் நடிப்பதில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். குறிப்பாக இவரை குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்தில் பார்த்த பலருக்கும், தற்போது இவர் கவர்ச்சியான வேடங்களை தேர்வு செய்து நடிப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'AAA' மற்றும் 'தமிழ்படம்2' ஆகியவற்றில் இவரின் உடை கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. 

புற்றுநோய்:

இந்நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு தகவல் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. " இது குறித்து அவர் கூறியுள்ளது " என் அம்மா மற்றும் குழந்தை இருவருமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்". 

மேலும் கடந்த 10 வருடங்களாக புற்றுநோய்க்கு எதிராக போராடி வருகிறேன். இதனால் புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்தும் பல நிறுவனங்களில் என் பங்களிப்பு இருக்கிறது. 

மார்பக புற்றுநோய் மற்றும் பிற புற்றுநோய்க்காக மருந்து கண்டுபிடிக்க இரத்த பரிசோதனையை உருவாக்க முற்படும் #STRIVE #sarahcannon ஆய்வின் பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார். 

View post on Instagram