actress kasthuri glamour dance in thamizhpadam 2.o
நடிகர் சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'தமிழ்ப்படம்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'தமிழ்ப்படம் 2.o' திரைப்படம் தற்போது தயாராகி விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்க்கனவே முதல் பாகத்தில் கோலிவுட் பிரபலங்கள் பலரை இந்த திரைப்படம் கேலி செய்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் இதே போன்று நடிகர் விஜய் நடித்த 'துப்பாக்கி', 'அஜித் நடித்த', 'மங்காத்தா' மற்றும் விஜய்சேதுபதி நடித்த 'விக்ரம் வேதா' உள்ளிட்ட பல படங்களை செமையாக கலாய்த்துள்ளது.
இந்த படத்தில், திருமணம் ஆகி இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும், நடிகை கஸ்தூரி படு கவர்ச்சியாக வெள்ளை நிற புடவையில் மழையில் நனைந்த படி டான்ஸ் ஆடியுள்ளது பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது. சமூக வலைதள வாசிகள் பலர் முகம் சுழித்தபடி கஸ்தூரியை விளாசி வருகின்றனர்.
வரும் ஜீலை மாதம் வெளியாகும் இந்த படத்தில் நடிகர் சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ் , சந்தானபாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் கண்ணன் இசையமைக்கும் இந்த படத்தில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
