actress kasthuri controversial twit for rajinikanth
நடிகை கஸ்தூரி தற்போது வரை எந்த ஒரு கட்சியிலும் இணையாமல், அனைத்து அரசியல் கட்சி நண்பர்களுக்கும் ஆதரவு தெரிவித்து,சுமுகமாக இருந்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு சமூக அக்கறையை வெளிப்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே நடிகர் கமலஹாசன் அரசியல் வருகை குறித்து அறிவித்த போது அதற்கு ஆதரவு கொடுத்தார் கஸ்தூரி. இப்போது, ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ள நிலையில், ரஜினியின் கட்சியில் சேர்ந்து பணியாற்ற விருப்பம் உள்ளது போல் சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கஸ்தூரி பதிவிட்டுள்ளது... பணம் பதவிக்காக அல்ல, கடமைக்காக, நன்றிக்காக மக்கள் நலனுக்காக
ஆன்மிக அரசியல் நமது மந்திரம்- உண்மை உழைப்பு உயர்வு நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும். அடுத்த தேர்தலில் அத்தனை தொகுதியிலும் நம்ம படையும் இருக்கும் !
but..... 1/2 என்று கூறியுள்ளார்.

இவர் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளதால்... பலருக்கும் இவர் ரஜினியின் அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்ற உள்ளாரா என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியில் இவர் இணைய உள்ளார் என பல தகவல்கள் வெளியான நிலையில் இப்போது இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
