இதுவும் அதே விஜயின் கோல்டு காயின் பஞ்சாயத்துதான். இந்தியாவில் இயக்குநர் ‘ரம்’ கோபால் வர்மாவுக்கு அடுத்த ட்விட்டரில் அதிகநேரம் வெட்டிக்கதை அடித்துக்கொண்டிருப்பவர் யார் என்றால் அது சந்தேகத்திற்கிடமின்றி நடிகை கஸ்தூரிதான். 

அப்படி இருக்கும்போது பத்திரிகையாளர்களுக்கு விஜய் கோல்டு காயின் கொடுத்த கோல்டு மேட்டரை விடுவாரா? உடனே தனது ட்விட்டர் பக்கத்தில்...

...விஜய் மீடியாவை மீட் பண்ணதுக்கு as usual  இந்த பக்கம் அந்த பக்கம் ஒரே சர்ச்சை. நான் அதுக்குள்ளே போகல. என் புத்திக்கு என்ன எட்டுது தெரியுமா?  ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் பண்ணிட்டு, ஜாய் அலுக்கஸுல purchase பண்ணியிருக்காரே! #LadiesMind 
#VijayPressMeet... என்று கமெண்ட் போட்டிருந்தார்.

இதை சில ஊடகங்கள் எடுத்துப்போட, அதை ரசித்துவிட்டு கஸ்தூரி ஒதுங்கியிருந்தால் அடுத்த செய்திக்கு என்ன செய்வதாம்? உடனே ‘செய்திகளை திரித்துப்போடுகிறார்கள்.கொளுத்திப்போடுகிறார்கள். சும்மா விடமாட்டேன்.கோர்ட்டுக்குப் போகிறேன்’ என்று அதே ட்விட்டரில் கொதிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஓவர் கொதிப்பு உடம்புக்கு ஆகாது. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க கஸ்தூரி. உங்க நியூஸா டைப் பண்ணி மீடியா மக்களுக்கு கைவலிக்குது...