actress kasthuri and actor vikram fan fight in twitter

நடிகர் விக்ரம் நடித்த சாமி2 படத்தின் ட்ரைலெர் நேற்று வெளியானது. 80 சதவீதம் ஆக்சன் படமாகவும் 20 சதவீதம் காதல் மற்றும் காமெடி கலந்த கலவையாக இந்த திரைப்படம் இருக்கும் என்று ட்ரைலெரை பார்த்தாலே தெரிகிறது. 

15 வருடத்திற்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த, சாமி படத்தின், இரண்டாம் பாகத்திலும், நடிகர் விக்ரம் கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். 

பலரது எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியான இந்த படத்தின் ட்ரைலெர் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிலும் விக்ரம் பேசும் பஞ்ச்சுகள் எதோ சிங்க் ஆகாதது போல் உள்ளது. 

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'முந்தா நாளு வந்த டீசர் ல கலாய்ச்சிருந்த அத்தனை டெம்பிளேட் சீன்சையும் ஒண்ணு சேர்த்த ஒரு ட்ரைலெர் ஸ்ஸ்ஸப்பபா! என கூறி கிண்டல் செய்திருந்தார்.

இதனை கண்ட நடிகர் விக்ரமின், ரசிகர் பொங்கி எழுந்து "முதலில் நீ உன் வயசுக்கு ஏதத் மாதிரி நடிக்கிறியா உன் பேரன் பேத்தி டிவி பாக்குற வயசுல நீ ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடுற நீ பேசலாமா... மூடிகிட்டு மொக்க போட்டோமோ போனோமான்னு இருக்கணும் என கூறி கஸ்தூரியை விளாசினார்.

இதற்கு பதில் கொடுத்த நடிகை கஸ்தூரி, 'சொந்த பெண்ணை விட சின்ன வயசு பொண்ணோட டூயட் பாடுறதுதான் வயசுக்கேத்த நடிப்பா? அந்த அளவு எனக்கு நடிக்க வராது சாமி. ஏன்னா நான் பேய்க்கு பொறக்கல, பூதம் இல்ல. போடா மூடிக்கிட்டு. என இப்படி ட்விட் போட்ட, ரசிகரை விட விக்ரமை அதிகமாக விமர்சித்து பேசியுள்ளார்.