தென்னிந்திய சினிமா நடிகைகளிலேயே முதன் முறையாக காஜல் அகர்வாலுக்குத் தான் இந்த பெருமை கிடைத்துள்ளது. 

கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் துப்பாக்கி, அஜித்துடன் விவேகம், சூர்யாவுடன் மாற்றான் என சூப்பர் டூப்பர் ஹிட் படிங்களில் நடித்து அசத்தியவர். கடந்த ஆண்டு ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது உலக நாயகன் கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருட்காட்சியகத்தில் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத், ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கஜோல், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் காஜல் அகர்வால். 

தென்னிந்திய சினிமா நடிகைகளிலேயே முதன் முறையாக காஜல் அகர்வாலுக்குத் தான் இந்த பெருமை கிடைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை செய்ய மேடம் டுசார்ட்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்து நிபுணர்கள் குழு வந்து காஜலின் அங்க அளவுகளை துல்லியமாக அளந்து எடுத்துச் சென்றனர். 

அதன்படி அச்சு அசலாக காஜல் அகர்வால் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள மெழுகு சிலை, இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. ஜிகு, ஜிகுவென வெள்ளி நிற உடையில் மின்னும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

மெழுகு சிலை அருகே பிங்க் நிற உடையில் காஜல் அகர்வால் நிற்கும் புகைப்படமும் லைக்குகளை குவித்து வருகிறது. அதைப் பார்க்கும் ரசிகர்கள் எது மெழுகு சிலை, எது நிஜ காஜல் அகர்வால் என்று தெரியாமல் திக்குமுக்காடி போகின்றனர்.