Asianet News TamilAsianet News Tamil

"யாருக்காக காத்திருக்கிறது இந்த தேவதை"... வைரலாகும் காஜல் அகர்வாலின் க்யூட் போட்டோ...!

கடற்கரையில் கையில் ஒயின் கிளாஸ் உடன் யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற காஜல் அகர்வாலின் புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

Actress Kajal Aggarwal Cute Photo Win 10 lakh Likes
Author
Chennai, First Published Dec 27, 2019, 11:57 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால், அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான "கோமாளி" திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது உலக நாயகன் கமல் ஹாசனின் "இந்தியன் 2" படத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது. 

Actress Kajal Aggarwal Cute Photo Win 10 lakh Likes

தற்போது கையில் படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால், திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்குள் நுழைய முடிவு செய்துள்ளார் காஜல் அகர்வால். அதற்காக அவரது குடும்பத்தினர் காஜலுக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேடி வருகின்றனர். 

Actress Kajal Aggarwal Cute Photo Win 10 lakh Likes

குடும்பம், குழந்தைகள் என கமிட்மென்டிற்குள் நுழைவதற்கு முன்பு சற்றே ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக மாலத்தீவிற்கு இன்பச்சுற்றுலா சென்றுள்ளார் காஜல். அங்கு அவர் பிகினியில் ஆட்டம் போட்ட போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் கடற்கரையில் கையில் ஒயின் கிளாஸ் உடன் யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற காஜல் அகர்வாலின் புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. பிங்க் நிற உடையில், சிம்பிள் மேக்கப்பில் காஜல அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படம் இரண்டே நாளில் கிட்டத்தட்ட 10 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios