Asianet News TamilAsianet News Tamil

’ஆமாங்க ‘சாட்டை’படத்தைக் காப்பி அடிச்சிதான் ‘ராட்சசி’ எடுத்திருக்கோம்...அதுக்கு என்ன இப்போ?’...தகிக்கும் ஜோதிகா...

தனது ‘ராட்சசி’ படம் சமுத்திரக்கனியின் ‘சாட்டை’படத்தைக் காப்பியிடைக்கப்பட்ட படம் அல்ல. அப்படியே காப்பி அடிக்கப்பட்டிருந்தாலும் நல்ல ஒரு சமூக அக்கறையுள்ள செய்தியை இப்படம் பேசுவதால் வெட்கப்பட ஒன்றும் இல்லை என்றும் சொல்கிறார் நடிகை ஜோதிகா.
 

actress jyothika interview
Author
Chennai, First Published Jun 25, 2019, 4:17 PM IST

தனது ‘ராட்சசி’ படம் சமுத்திரக்கனியின் ‘சாட்டை’படத்தைக் காப்பியிடைக்கப்பட்ட படம் அல்ல. அப்படியே காப்பி அடிக்கப்பட்டிருந்தாலும் நல்ல ஒரு சமூக அக்கறையுள்ள செய்தியை இப்படம் பேசுவதால் வெட்கப்பட ஒன்றும் இல்லை என்றும் சொல்கிறார் நடிகை ஜோதிகா.actress jyothika interview

’காற்றின் மொழி’படத்துக்குப் பின்னர் ஜோதிகா நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ். ஆர் பிரபு தயாரிப்பில் புதுமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராட்சசி. பூர்ணிமா பாக்கியராஜ் இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோகுல் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட் செய்துள்ளார். 

மிகச் சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருந்தது. முழுக்க அரசுப்பள்ளியை கதை களமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஒரு அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் அங்கு வரும் ஒரு பெண் ஆசிரியையும் சுற்றி நடக்கும் கதையாக இந்தப்படம் உள்ளது. சமுத்திரகனி நடிப்பில் சில வருடங்கள் முன் வந்த சாட்டை படம் இதே கதையை மையமாக வைத்து வந்து வெற்றி பெற்ற படம். ராட்சசி டிரெய்லர் வந்தவுடனே எல்லோரும் இப்படம் சாட்டையை காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளது என கூறிவந்தார்கள். 

ராட்சசி படத்தின் பத்திரிரைக்கையாளர் சந்திப்பில் நடிகை ஜோதிகா இதை மறுத்து பேசினார். அவர் பேசுகையில், ''நான் இந்தப்படத்தை ஒத்துக்கொண்டதே இப்படம் சொல்ல வரும் விசயத்துக்காகத்தான். இந்தக்கதை அரசு பள்ளிகூடங்கள் எப்படி இயங்க வேண்டும் என்பதை மையப்படுத்தி படங்கள் வந்திருந்தாலும் இது முற்றிலும் மாறுபட்ட பார்வையை கொண்டிருந்தது. actress jyothika interview

இந்தப்படத்தின் டிரெய்லர் வந்தவுடனே எல்லோரும் என்னை பெண் சமுத்திரகனி, என்றும் படம் சாட்டை படம் மாதிரியே இருக்கிறது எனவும்  சமூக வலைதளங்களில் சொல்லியிருந்தார்கள். நான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. சூர்யா போனில் தான் அச்செய்திகளைப் பார்த்தேன். இந்தப்படம் கண்டிப்பாக காப்பி இல்லை. இந்தப்படத்தின் பார்வையே வேறு. ஆனால் அப்படியே இது காப்பியாக இருந்தாலும் இந்த விசயத்தை பேச இன்னும் நிறைய படங்கள் வர வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் எத்தனை படம் இந்த விசயத்தை பேசி வந்தாலும் நான் சந்தோஷப்படுவேன். இன்னும் இன்னும் நிறைய படங்கள் வர வேண்டும்'' என்று கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios