Asianet News TamilAsianet News Tamil

இரவில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுகிறார்.. சிக்கலில் சிக்கிய பாஜகவை சேர்ந்த நடிகை..!

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜெயலட்சுமி. பல்வேறு சீரியல்களிலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். 

Actress Jayalakshmi against complaint with Chennai Police Commissioner Office
Author
Chennai, First Published Sep 14, 2021, 6:11 PM IST

பாஜக கட்சியை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கந்து வட்டி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜெயலட்சுமி. பல்வேறு சீரியல்களிலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். 

Actress Jayalakshmi against complaint with Chennai Police Commissioner Office

இந்நிலையில், சென்னை பாடி தெற்கு மாட வீதியில் மகளிர் சுய உதவி குழு நடத்தி வரும் கீதா என்பவர் சென்னை  காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தேர்தல் நேரத்தில் பாஜகவை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி தங்களுக்கு அறிமுகமானதாகவும், வங்கி மூலம் கடன் உதவி பெற்று தந்ததோடு வெற்று காசோலை மற்றும் வெற்று பேப்பர் ஆகியவற்றில் கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

Actress Jayalakshmi against complaint with Chennai Police Commissioner Office

தாங்கள் பெற்ற கடனுக்கு ஈடான தொகையை செலுத்தி முடித்துவிட்டதாகவும், ஆனால் தங்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு ஜெயலட்சுமி மிரட்டுவதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் வழக்கறிஞர்கள் என அறிமுகமான ஜார்லஸ், அலேக்சாண்டர் ஆகியோர் வீடுகளுக்குள் வந்து கந்து வட்டி கொடுமை அளிப்பதாகவும் குற்றம்சாட்டினார். கந்து வட்டி கொடுமை அளிக்கும் ஜெயலட்சுமி மற்றும் அவரது நண்பர்களான  ஜார்லஸ் மற்றும் அலேக்சாண்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை காவல் ஆணையரிடம் கீதா புகார் அளித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios