மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ஹிந்தி படங்களில் நடிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவரை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கதாநாயகியாக நடிக்க வைக்க சில இயக்குனர்கள் முயற்சி செய்து வந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அந்த வகையில், இவர் இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித்தை வைத்து, அடுத்ததாக இயக்க உள்ள, 60 ஆவது படத்தில் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படாமல் தான் உள்ளது.

இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் , உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த, நடிகர் விஜய் தேவார கொண்டாவிற்க்கு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை, பிரபல தெலுங்கு முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்குகிறார். 

மேலும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.