பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளர்களில் ஜனனி ஐயரும் ஒருவர். ஓவியாவை மாதிரி குணத்தால் இவர் மக்கள் மனதில் இடம் பெறவில்லை. அவரின் அழகு தான் அவருக்கான அந்த ரசிகர் பட்டாளத்திற்கு காரணம்.

பொதுவாக எந்த பிரச்சனையிலும் அதிகம் அடிபடாமல், பட்டும் படாமல் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் ஒரே போட்டியாளர் ஜனனி என்றுக் கூறலாம்.
 ஏதாவது பிரச்சனை என்று வந்துவிட்டால் அதில் ஜனனி தலையிடும் விதமே கொஞ்சம் வித்யாசமாக தான் இருக்கும். சின்ன குழந்தைகள் பெரியவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயலும் குழந்தை தனத்தை தான் அவரின் நடவடிக்கைகள் நியாபகப்படுத்தும். 

இவர் பிக் பாஸ் வீட்டில் வைத்து முதல் முறையாக தனது காதல் தோல்வி பற்றி சக போட்டியாளர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
 நேற்றைய நிகழ்ச்சியின் போது மிகவும் சோகமாக இந்த சம்பவம் பற்றி அவர் கூறி இருக்கிறார். 

அவரின் காதலன் அவரை பிரிந்து சென்றதற்கு அவர் கூறிய காரணம் தான் இதில் வருத்தத்திற்குரியது. ஜனனி அந்த காதலன் அளவிற்கு பணம்படைத்தவராக இல்லாமல் இருந்ததால், எங்க ஸ்டேட்டஸுக்கு சரிபட்டு வராது என கூறி இருக்கிறார் அந்த நபர்.

இதனால் மனமுடைந்த ஜனனி எப்படியும் அதிகம் பணம் சம்பாதித்து அந்த நபரை விட தான் முன்னேறி காட்ட வேண்டும் என்ற வெறியுடன் உழைத்து கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். இது போன்ற தைரியம் இல்லாத ஆண்களை யாரும் காதலிக்காதீங்க என்று சோகமாக அறிவுரையும் கூறி இருக்கிறார். ஜனனியை விட அதிகமாக பேசும் அவரது கண்கள் இந்த நினைவுகளால் சோகமானது அவரது ரசிகர்களுக்கும் வருத்தத்தை அளித்திருக்கிறது.