'மேயாத மான்' படத்தில் நடிகர் வைபவுக்கு, தங்கையாக நடித்திருந்தவர் நடிகை இந்துஜா. தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய நாட்களிலேயே, தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் அடுக்கடுக்காக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை இந்துஜா.

மேயாதமான் படத்தை தொடர்ந்து, 'மெர்குரி', 'பில்லா பாண்டி', 'பூமராங்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.  தற்போது விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தில் புட்பால் டீம்மின் கேப்டனாக இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்துஜா இயக்குனர் ஏ.கே இயக்கும் படத்தில், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் நடிகர் துருவா கதாநாயகனாக நடித்துள்ளார்.  இவர் ஏற்கனவே ஆண்மை தவறேல் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ள இந்த படத்தில் துருவா நடிகராக மட்டும் இன்றி,  இணை தயாரிப்பாளராகவும் இருந்து ஷாலினி வாசனுசன் சேர்ந்து தயாரித்துள்ளார்.  இந்தப் படத்தில் நடிகை இந்துஜா சாதாரண பெண்ணாகவும்,  அதிரடி காட்சிகளில் நடிக்கும் பெண் என  இரட்டை வேடங்களில் நடித்து,  தன்னுடைய நடிப்பின் பரிமாணத்தை வித்தியாசப் படுத்தி காட்டியுள்ளார்.  வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் நிச்சயம் வெற்றி பெரும் என கூறியுள்ளனர் படக்குழுவினர்.