தினமும் 12 மாத்திரை சாப்பிட்டேன் ... இந்த விஷயத்தால் அதையும் விட்டு விட்டேன் ஆதங்கப்படும் இலியானா..!

நடிகை இலியானா, நடிப்பில் நாளை 'பகல்பந்தி' என்கிற பாலிவுட் திரைப்படம் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். 
 
actress ileana about her love failure affects

நடிகை இலியானா, நடிப்பில் நாளை 'பகல்பந்தி' என்கிற பாலிவுட் திரைப்படம் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட,  நடிகை இலியானா தன்னுடைய காதல் தோல்வியால் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். 

actress ileana about her love failure affects

இலியானா சில வருடங்களாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ஆண்ட்ரு என்கிற புகைப்பட கலைஞர் ஒருவரை காதலித்து வந்தார். அவ்வப்போது,  தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஆண்ட்ரு எடுத்த தன்னுடைய புகைப்படங்களையும், அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றியதால், பிரிந்து விட்டதாக கூறினார். இந்நிலையில் காதல் தோல்வியால் இலியானா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவரே ஒரு பெட்டியில் கூறியிருந்தார் என்பது நாம் அறிந்ததே.

actress ileana about her love failure affects

மன அழுத்தத்திற்கான தொடர் சிகிச்சை பெற்றதாகவும், இதனால் ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட 12 மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாகவும் தற்போது கூறியுள்ளார். அதேபோல் அதிக மாத்திரைகள் உட்கொண்டால் உடல் எடை கூடியதாகவும், அதனால் ஜிம்முக்கு சென்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார் இலியானா. சிலர் தான் ஜிம்முக்கு சென்று வரும் புகை படங்களை தொடர்ந்து வெளியிட்டதால் இப்போது ஜிம்முக்கு செல்வத்தையும் விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

actress ileana about her love failure affects

ஒருவழியாக காதல் தோல்வியில் இருந்து மீண்டு, மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ள இலியானா,  தி பிக் புல்'  என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இலியானா தமிழியில் விஜயுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios