வருடம் தோறும், பிப்ரவரி 4 ஆம் தேதி, 'world Cancer Day ' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுடைய தலை முடியை தானமாக கொடுப்பது, தங்களால் முடிந்த பணம் கொடுப்பது போன்ற நற்செயல்களை செய்து வருகிறார்கள். 

இந்நிலையில், மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சைக்கு பின் மீண்டு வந்த நடிகை கௌதமி, கேன்சர் நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக கடந்த சில வருடங்களாக அமைப்பு ஒன்றை தொடங்கி நடத்தி  வருகிறார். இந்த அமைப்பு மூலம் புற்று நோய் உள்ளவர்களை தைரியப்படுத்துவதோடு, அவர்களின் மேல் சிகிச்சைக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.

நேற்று, புற்று நோய் தினம் என்பதால், பிரபல தனியார் புற்று நோய் மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள புற்று நோய் நோயாளிகளை சந்தித்தார். மேலும் புற்று நோய் பாதித்த குழந்தை வரைந்த ஓவியத்தை பார்த்து ரசித்தார். இந்த புகைப்படங்களை தற்போது வெளியாகியுள்ளது. அதே போல் இவரின் இந்த செயலுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை  தெரிவித்து வருகிறார்கள்.