கவுதமியின் கோபத்திற்கு ஆளான விஜய்..! அப்படி என்ன செய்தார் தெரியுமா விஜய்..?

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் சர்க்கார். இந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டு உள்ளது.இந்த காட்சிக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அதில் குறிப்பாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

நடிகர் விஜய் இவ்வாறு செய்தால், அவர்களுடைய ரசிகர்களை புகைப்பிடிக்க ஊக்குவிக்கும் விதமாக அமையும் என அவர் தெரிவித்து இருந்தார்.

பின்னர் அந்த காட்சி அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களைக் கவுரவிக்கும் வகையில் ‘வாழ்க்கையைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியில் பேசிய நடிகை கவுதமி, இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கம் விஜய் இப்படி ஏன் நடிக்க ஒப்புக்கொண்டார் என தெரியவில்லை என அவர் கூறி சற்று கோபமாக பேசினார்.

புகைப்பிடிப்பதால் அது அருகில் உள்ளவர்களை கூட அதிகம் தாக்கும் என அவர் தெரிவித்து இருந்தார்.